நடிகர் விஜய் பயிலகம் திறப்பு!

Actor Vijay | Education | Pondicherry

புதுச்சேரி: புதுவை அரியாங்குப்பம் சாய்பாபா நகரில் நடிகர் விஜய் பயிலகம் திறக்கப்பட்டது. அரியாங்குப்பம் தொகுதி தலைவர் வசந்த ராஜா ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு புதுவை மாநில தலைமை விஜய் மக்கள் இயக்கச் செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கப் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு பயிலகத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் ஊட்டசத்து உணவு, இனிப்பு ஆகியவற்றை வழங்கினார்.

Actor Vijay | Education | Pondicherry

இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், தொகுதி தலை வர்கள், அணித்தலைவர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *