Periyar Birthday: சமூகநீதி நாள் உறுதிமொழி!

சென்னை: திராவிட இயக்கத் தலைவரும் சமூக நீதி போராளியுமான தந்தை பெரியாரின் பிறந்தநாளான இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள்.

சமூக நீதி போராளியான தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளை சமூக நீதி நாளாகக் கடைபிடிப்பதாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த நாளில் சமூக நீதி காக்க உறுதிமொழி ஏற்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதன் தொடர்ச்சியாகப் பெரியார் பிறந்தநாளன்று சமூக நீதி நாளாகக் கடைபிடிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் திமுக சார்பில் இன்று சமூகநீதி நாள் உறுதி ஏற்பு நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், “தந்தை பெரியாரின்‌ ஒவ்­வொரு பிறந்த நாளும்‌ “சமூ­க­நீதி நாளாக” கடைபிடிக்கப்படும் என்றும்‌; அப்­பி­றந்த நாள்‌ அன்று “சமூ­க­நீதி நாள்‌ உறுதிமொழி ஏற்க வேண்டும்‌” என மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்சர்‌, கழகத்‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறி­வித்­த­தற்கு இ­ணங்க, தந்‌தை பெரியார்‌ பிறந்த நாளான இன்று (17.9.2023) காலை 10.30 மணி அளவில்‌ சென்னை, அண்ணா அறி­வா­ல­யத்தில்‌ உள்ள அறிஞர்‌ அண்ணா – முத்­த­மி­ழ­றிஞர்‌ கலைஞர்‌ சிலை முன்பு, கழக அமைப்புச்‌ செய­லாளர்‌ ஆர்‌.எஸ்‌.பாரதி தலை­மையில்‌ “சமூ­க­நீதி நாள்‌ உறு­தி­மொழி ஏற்பு” நிகழ்ச்சி நடை­பெறும்‌.

இதில்‌ சென்னை வடக்கு, சென்னை வட­கி­ழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்­மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டக்‌ கழகச்‌ செய­லா­ளர்கள்‌ கலந்து கொள்­கின்­றனர்‌. இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்­டத்தைச்‌ சேர்ந்த மாவட்ட, பகுதி, வட்டக்‌ கழகச் செய­லா­ளர்கள்‌ மற்றும்‌ நிர்­வா­கிகள்‌, அனைத்து அணி நிர்­வா­கிகள்‌ மற்றும்‌ கழகத்‌ தோழர்கள்‌ தவ­றாது கலந்து கொள்­ளு­மாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *