பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

Advertisements
பிரதமர் மோடியுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையத்தில் சந்தித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு  திருச்சி புறப்பட்டார். திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்க, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்றனர். தூத்துக்குடியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை  எடப்பாடி பழனிசாமி  சந்தித்தார்
. 10 நிமிடங்கள் கொண்ட இந்தச்சந்திப்பில் தேர்தல் களம்  குறித்து பிரதமர் கேட்டறிந்தார். இதில் எடப்பாடி பழனிசாமி பேப்பரில் மனுக்களை அவரிடம் கொடுத்துள்ளார். மேலும் ஒ .பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்க பலமுறை கடிதம் எழுதியும் பிரதமர் சந்திக்கத் தொடர்ந்து மறுக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *