Kanyakumari: பெண்கள் நடத்திய குடிமி பிடி சண்டை வைரல்!

Advertisements

சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் பெண் நடைபாதை வியாபாரிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் சுற்றுலாபயணிகளை முகம் சுளிய வைத்ததுடன் சமுக வலைதலங்களில் வெளியான காட்சிகள் வைரலாகிவருகிறது.

நாட்டின் கடைகோடி எல்லையும் சர்வதேச சுற்றுலாதலமுமான கன்னியாகுமரியில் நாள்நோறும் பல்லாயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தச் சுற்றுலாபயணிகளிடம் வியாபாரம் மேற்கொள்ள 500க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் விற்பனை பணிகளைமேற்கொண்டுவருகின்றனர்.

முக்கடல் சங்கமத்தில் தினமும் புனித நீராடிக் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வர். இதேபோல் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்த நிலையில் இன்று சுற்றுலாபயணிகள் அதிகரித்து காணபட்ட நிலையில் விற்பனையில் ஏற்பட்ட போட்டியின் காரணமாகப் பெண் நடைபாதை வியாபாரிகள் ஒன்றுடன் ஒன்று  பொதுஇடத்திலேயே மோதிகொண்டனர்.

இதனை அப்பகுதியில் இருந்த சுற்றுலாபயணிகள் படம் பிடித்துச் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும் முக்கிய சுற்றுலாதலத்தில் பெண் நடைபாதைவியாபாரிகள் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டசம்பவம் சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைத்ததுடன் இது போன்று பொது இடங்களில் மோதலில் ஈடுபடும்  வியாபாரிகள்மீது கடுமையான  நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுமெனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *