
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் நடிகை. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு புடவை அணிந்து எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வருகின்றார். கண்டண்டெண்ட் ஓரியெண்டேட் படங்களில் நடித்துத் தனது நடிப்புக்கு அவ்வப்போது தீனி போட்டு வருகின்றார்.
மகா நடிகை என்ற படத்தில் நடித்துத் தேசிய விருதினை வென்றார். இந்தப் படத்தில் இவரது நடிப்பை ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் பாராட்டியது. அந்தப் படம் இவரது திரை வாழ்க்கையில், மிகவும் முக்கியமான படம்.
மகா நடிகை படத்தினைப் போல், நடிப்பில் ஸ்கோர் செய்துகொள்ளக்கூடிய, கதைகளான சானி காகிதம், ரகு தாத்தா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த திரை உலகிற்கும் சர்ப்ரைஸ் கொடுத்து வருகின்றார்.

தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், பிரபல நடிகை மேனகாவின் மகள். ஹேம்லியான லுக்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்க்கு தென்னிந்திய சினிமாவில் மாபெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 18.1 மில்லியன் ரசிகர்கள்பின் தொடருகின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அண்மையில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில், தசரா படத்தில் நடித்தற்ககா சிறந்த நடிகை விருது இவருக்கு வழங்கப்பட்டது. நேரடித் தெலுங்குப் படமான இந்தப் படத்தில் அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார். இப்படம் தமிழிலும் வெளியானது.
அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ரகு தாத்தா படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் ஓடிடியில் அதிக நேரம் ஓடிய படம் என்ற சாதனையப் படைத்துள்ளது.
இவர் தனது இன்ஸ்டாகிராமில் கருப்பு நிற புடவை கட்டி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.


