
ஈரோடு மற்றும் சேலம் திருமண்டலங்களின் பேராயராக பணியாற்றி வந்த ஜேக்கப் லிவிங்ஸ்டனின் திடீர் மரணம் கிறிஸ்துவ மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
ஈரோடு மற்றும் சேலம் திருமண்டலங்களின் பேராயராக பணியாற்றி வந்தவர் ஜேக்கப் லிவிங்ஸ்டன். இவர் ஈரோடு சி.எஸ்.ஐ ஆலயத்தில் பேராயராகவும் பணியாற்றி வந்தார்.இவரோட சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதி ஆகும்.இவர் கடந்த 2025 ஆம் வருஷத்துல ஆகஸ்ட் 16 ஆம் தேதி சேலம் மற்றும் ஈரோடு திருமண்டலங்களின் பேராயராக பணியில் சேர்ந்திருக்காரு.இவருக்கு ஹெலனா அமுதா என்கிற மனைவியும் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் ஒரு மகளும் இருக்கிறாங்க.
இந்த நிலையில் தான் கடந்த இரு வாரங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சை பெற்று வந்து இருக்கார். தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்த ஜேக்கப் லிவிங்ஸ்டன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொண்டு வந்த நிலையில் , சம்பவ தினமான கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு 12-02-2026 அன்று மருத்துவமனை அருகிலேயே உள்ள மேம்பாலத்தில் நடைப்பயிற்சியை மேற்கொண்டிருந்துருக்காரு.
அப்போது, அவருக்கு திடீரென ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக மேம்பாலத்தில் இருந்து நிலைதடுமாறி சுமார் 40 அடி பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு உடனடியாக அருகிலேயே இருந்த ஈரோடு தலைமை மருத்துவமனையில் சேர்த்து இருக்காங்க.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிச்சு இருக்காங்க. அப்படியும் அவரை காப்பாத்த முடியல. சிகிச்சை பலனளிக்காமல் இறந்து பொய் இருக்காரு.இறந்து போன ஜேக்கப் லிவிங்ஸ்டனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவரது இறப்பு தோசுடர்பாக விசாரணை நடத்தி வர்றாங்க. அவரது உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுச்சு.
அவரது மறைவு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ சபையினரையும் , கிறிஸ்துவ மக்களிடையேயும் பெருத்த கவலையை ஏற்படுத்தி இருந்திச்சு. ஏராளமானோர் அங்கு குவிந்து அவரது உடலை பார்த்துச்சென்றாங்க. ஆயரின் திடீர் மறைவு அங்கு வந்திருந்தோரை கண்கலங்கச் செய்திருந்தது. இந்த நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் வலுப்பெற்றிருக்கும் நிலையில் மேற்படி விசாரணை நடைபெற்று வருகிறது ..




