அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும் – மு.க.ஸ்டாலின் பேச்சு.!

Advertisements

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் இன்று சபநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பேசிய அவர் தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட சதிகளை முறியடிக்க ஒரே வழி மாநில சுயாட்சி தான் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, அவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும் என்றும், முயன்றால் மீண்டும் அதைத் திருத்த முடியும் என்றும் கூறினார். இதையடுத்து, மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை. தொடர்ந்து மத்திய அரசு அனைத்து அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், இன்னும் எத்தனை நாட்கள் தான் நாங்கள் வாங்கும் இடத்தில் இருப்பது என்று கேள்வி எழுப்பினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *