Parvathy Thiruvothu: குட்டி குஷ்பு போல் மாறிய பூ பட நாயகி!

Advertisements

பூ பட நாயகி பார்வதியின் லேட்டஸ்ட் தோற்றம், பார்க்கும் ரசிகர்களையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது. எக்கச்சக்கமாக உடல் எடை கூடி… குட்டி குஷ்பு போல் மாறியுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பார்வதி, ஆரம்பத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளினியாக தன்னுடைய கேரியரை துவங்கியவர். இதை தொடர்ந்து, மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அவுட் ஆப் சிலபஸ்’ என்ற படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக மாறினார்.  தமிழில் 2008 ஆம் ஆண்டு.. இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘பூ’ படத்தின் மூலம், கதாநாயகியாக அறிமுகமானவர் பார்வதி. தன்னுடைய முதல் படத்திலேயே மிகவும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
Parvathy Thiruvothu

இதை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், மரியான், போன்ற பல படங்களில் நடித்தார். சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் மலையாள சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.

தற்போது மலையாளம் மட்டும் இன்றி, தமிழிலும் தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் பார்வதி… விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது.

மேலும் தன்னுடைய மனதில் படும் கருத்துக்களை மிகவும் போல்டாக பேசி… சமூக வலைத்தளத்தில் சில சர்ச்சைகளில் சிக்கிவரும் பார்வதி கொழுக்கு மொழுக்கு அழகில் இருக்கும் ரீசென்ட் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டுள்ளார். கவர்ச்சிக்கு குறைவைக்காமல்.. குட்டை பாவாடையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *