காங்கிரஸ் ரஞ்சன் கைது? ஜான் பாண்டியனின் பகீர் வாக்குமூலம்.!

மூத்தோர் சொல்லும் முன் கசக்கும், பின் இனிக்கும் என்பார்கள். ஆனால் இந்த வீரமணி சிஞ்சிறு சிமியை, கொஞ்சும் மழலையை, பாலியல் செய்த வழக்கில் அந்த அர்த்தமுள்ள பழைய பழமொழியே தலைகீழாக மாறிவிட்டது.  இவரது இன்றைய அலங்கோல காரியத்தால், தற்போது காலாட்டி ஓய்வெடுக்க வேண்டிய வயதிலே வீரமணி கைது செய்யப்பட்டு இவரோடு சேர்ந்து 4 பேர் கலி திங்கப்போகும் கதையும், இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதற்கு  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்  ஜான்பாண்டியன் கொடுத்த  பதீர் விளக்கத்தையும் பார்க்கலாம்.!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி, சிறுமி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வீடியோ ஆதாரம் மற்றும் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலில், ஜெம் கிரானைட் வீரமணிக்கும், ஜான் பாண்டியனுக்கும் என்ன தொடர்பு? என்பதே முக்கிய கேள்வியாக எழுந்தபோது இது குறித்து ஜான்பாண்டியன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் வீரமணியுடன் தனக்கு தொழில் ரிதியாக மட்டுமே பழக்கம் உள்ளது என்று ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஷயம் எதுவும் அவர் என்னிடம் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.  அதுவோடு தனக்கும் காங்கிரஸ் எஸ்.சி மாநில தலைவர் ரஞ்சனுக்கும் பழக்கம் உண்டு.  அவர்தான் என்னை ஒரு நாள் தொடர்பு கொண்டு ஒரு விஷயம் தங்களிடம் சொல்ல வேண்டும், நேரில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு,

அப்போதுதான் நேரில் தனியார் விடுதியில் சந்தித்தபோது சாந்தியை வீரமணி அபியூஸ் செய்ததாவும், இதை தவறாக பயன்படுத்தி அவரை மிரட்டி 20 கோடி  பணம் வாங்கி தருமாறும் என்னிடம் சொன்னார்கள், நான் அதை மறுத்துவிட்டேன், இந்த மாதிரி கீழ்தரமான வேலை எல்லாம் நான் செய்ய மாட்டேன், நீங்கள் முறையாக புகார் கொடுங்கள்  என்று  தெரிவித்துவிட்டு, தான் புறப்பட்டதாக கூறினார்.  அதோடு தனக்கு சாந்தி யார் என்று தெரியாது என்றும் இதில் ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு பங்கு உண்டு ஆணித்தனமாக கூறினார்.

அடுத்ததாக, காங்கிரஸ் ரஞ்சன் பெயர் ஏன் இந்த விவகாரத்தில் பேசப்படுகிறது. ரஞ்சன், ஜான் பாண்டியனுக்கு இதில் தொடர்பு உண்டு செய்தியாளர் சந்திப்பில் கூறியதில், இதுதொடர்பாக நான் ஆதாரத்தோடு புகார் அளித்தும் அப்போதை திமுக காவல்துறை இதில் எனது ஆதாரங்களையெல்லாம் வாங்கினார்கள். ஆனால் இந்த வழக்கை அப்படியே மூடி மறைத்துவிட்டார்கள். அது  ஏன் என்று தனக்கு தெரியவில்லை என்பதையும், இதில் பெரிய  அரசியல் தலைவர்களுக்கு தொடர்களுக்கும் மழுப்பல் பதிலையே தனக்கு தெரியாது என்றும் பரபரப்பு புகார் அளித்திருக்கிறது.

ஆக இதில் யார் சொல்லறத நம்பபுறனு ஒரே குழப்பமா இருக்குல ஜான்பாண்டியன் என்னா ரஞ்சனுக்கு இதில் தொடர்பு இருக்கிறது. என்கிறார். ரஞ்சன் என்னடான ஜான்பாண்டியனுக்கு இதில் முழு பங்கு உள்ளது என்கிறார். ஆக இந்த வழக்கில் பெண் சாந்தி அளிக்கும் வாக்கு மூலத்தில்தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் யார் என்பது இவ்வுலகிற்கு அம்பலமாகும். இதற்கிடையே, வீரமணி விவகாரம் எப்படி காவல்துறை விசாரணைக்கு வந்தது? என்பதுதான் அடுத்த கேள்வி.

புகார், விசாரணை, கைது, நீதிமன்ற நடவடிக்கை என வழக்கு அடுத்தடுத்த கட்டங்களை சந்தித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வீரமணியுடன் தொடர்புடையதாக கூறப்படும் நபர்கள் குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், முன்பு நடைபெற்ற விசாரணை ஏன் முடித்து வைக்கப்பட்டது என்ற கேள்வியும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகளிடமும் தற்போதைய விசாரணை தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், பழைய விசாரணையில் என்ன நடந்தது? எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது? பின்னர் ஏன் மீண்டும் வழக்கு முக்கியத்துவம் பெற்றது? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.இதே நேரத்தில், வீரமணி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளும் வழக்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆவணங்கள், செல்போன்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் வழக்கில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன? அவற்றில் இருந்து என்ன தகவல்கள் கிடைத்துள்ளன? என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும். அதேபோல், வீரமணியுடன் தொடர்புடையதாக கூறப்படும் மற்ற நபர்களிடம் விசாரணை தீவிரமடைகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவரின் பெயர் வழக்கில் குறிப்பிடப்படுவது மட்டும் அவர் குற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரமாகிவிடாது. ஒவ்வொரு நபருக்கும் உள்ள தொடர்பு, அவர்களுக்கு எதிரான ஆதாரம், காவல்துறை விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் சட்டரீதியான நிலை தெளிவாகும்.

ஜான் பாண்டியனின் விளக்கம், ரஞ்சன் மற்றும் சாந்தி தொடர்பான தகவல்கள், காவல்துறை விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என இந்த விவகாரம் தொடர்ந்து சூடுபிடித்து வருகிறது. அடுத்தடுத்து வெளியாகும் விசாரணை தகவல்களும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களுமே இந்த வழக்கின் உண்மை பின்னணியை தெளிவுபடுத்தும். இந்த வழக்கில் தற்போது வீரமணி, சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசன் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் காங்கிரஸ் மாநில தலைவர் ரஞ்சன் கைது செய்யப்படுவாரா என்று கேள்வியும் எழுகிறது.

மேலும், வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரகாஷுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, வழக்கை முன்பு விசாரித்த 3 காவல் அதிகாரிகளுக்கும் CCB சம்மன்  அனுப்பி, வழக்கு முன்பு முடித்து வைக்கப்பட்ட விதம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதனால், ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு தற்போது பல்வேறு கோணங்களில் மீண்டும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இவை அனைத்தும் விசாரணையில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் என்பதால், இறுதி சட்ட முடிவு நீதிமன்றத்தில், சிறுமிக்கு சாதகமா வருமா இல்லை பாதகமா வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *