கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு.!

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் அவருடைய பங்களிப்பை போற்றும் விதமாக, இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஏராளமான தேசிய விருதுகளை வைரமுத்து பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், இந்த விருது தன்னை மேலும் முனைப்புடன் இலக்கியத்தில் ஈடுபட வைக்கும் என்று வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

விருது பெறுபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். மட்டுமல்லாது சரஸ்வதி தேவியின் வெண்கல சிலை மற்றும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படும்.

கடந்த 2024ம் ஆண்டு, 59வது ஞானபீட விருதை, இந்திய கவிஞர் வினோத் குமார் சுக்லா பெற்றிருந்தார். தமிழகத்தை பொறுத்தவரை, 24 ஆண்டுகளுக்கு பிறகு விருது வழங்கப்பட்டிருக்கிறது.

வைரமுத்து இதற்கு முன்னர் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, சாகித்ய அகாடமி, கலைமாமணி விருது, பாவேந்தர் விருது, பாரதி இலக்கிய பரிசு போன்ற விருதுகளையும், 7 தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *