Parliamentary Election 2024: 3 கம்பெனி துணை இராணுவத்தினர் வருகை!

Advertisements

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காகக் கோவை இரயில் நிலையம் வந்த 3″ கம்பெனி துணை இராணுவத்தினரை மாநகர தேர்தல் பிரிவு காவல்துறையினர் வரவேற்றனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளைத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மேற்கொண்டு வருகிறார். இந்தத் தேர்தலின்போது பாதுகாப்பு பணிகளுக்காக 200 கம்பெனி துணை ராணுவத்தை மத்திய அரசிடமிருந்து சத்யபிரத சாகு கோரியுள்ளார். முதல்கட்டமாகத் தமிழகத்திற்கு 25 கம்பெனி துணை ராணுவம், மார்ச் 1-ந்தேதி முதல் வரும் என்று ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் எனப் பணிகளைத் துவங்கியுள்ளனர்.இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காகக் கேரளாவிலிருந்து கோவை மாநகரம், திருப்பூர், மற்றும் நீலகிரி பகுதிகளுக்காக 3 கம்பெனி துணை இராணுவத்தினர் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கேரளாவிலிருந்து கொச்சுவேலி விரைவு ரயில்மூலம் கோவை ரயில் நிலையம் வந்த 276 துணை இராணுவ வீரர்களைக் கோவை மாநகர தேர்தல் பிரிவு போலீஸார் வரவேற்றனர். பின்னர் காவல் துறை பேருந்துகள்மூலம் துணை இராணுவத்தினர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கோவை மாநகர் மற்றும் திருப்பூர், நீலகிரியில் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *