
புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபானம் கடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார், இதில் மூன்று லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் மற்றும் கார் ஆகியவற்றை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு ஆய்வாளர் மீனா மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா மற்றும் காவலர் தலைமையில் விழுப்புரம் அடுத்துள்ள விக்கிரவாண்டி பெரிய காலனி அம்பேத்கர் சிலை அருகே வாகன தணிக்கில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் அதில் ஏராளமான உயர்ரக மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது, பின்னர் காரில் இருந்த வானூர் வாழப்பட்டாலும் பாளையம் பகுதி சேர்ந்த சூர்யா என்பவரைப் பிடித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் சுமார் பீர் மற்றும் பிராந்தி பாட்டில்கள் 3000-க்கும் மேற்பட்ட இறந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் மொத்த மதிப்பு சுமார் மூன்று லட்சம் ஆகும் பின்னர் அவரை நீதிமன்ற காவல் நிலையத்தில் ஆஜர் படுத்தி மது பாட்டில்கள் மற்றும் காரை மதுவிலக்கு போலீசார்கள் பறிமுதல் செய்தனர்.

