Parliament session2024:ஜனாதிபதி உரையின்போது நீட்… நீட்… எனக் குரலெழுப்பிய எதிர்க்கட்சிகள்!

புதுடெல்லி:பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

* உத்தரப்பிரதேசம், தமிழகத்தில் பாதுகாப்பு வழித்தடத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.

* பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி முன்பை காட்டிலும் 18 மடங்கு அதிகரித்துள்ளது.

* போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை அரசு இயற்றி உள்ளது.

* வினாத்தாள் கசிவு பிரச்சனைகளைக் களைய கட்சி, அரசியலைத்தாண்டி நாம் ஒன்றிணைய வேண்டும்.

* வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

* வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை அரசு நிச்சயம் தண்டிக்கும்.

காசி தமிழ் சங்கம் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் உள்ளிட்ட கலாச்சாரத்தைப் பெருமைப்படுத்தும் நிகழ்ச்சிகளை அரசு தொடங்கி உள்ளது என்று கூறினார்.

ஜனாதிபதியின் உரையின்போது மணிப்பூர் விவகாரம்குறித்து பேசுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். தொடர்ந்து நீட்… நீட்… என முழக்கமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *