ஆண்டுக்கு 2 லட்சம் இந்தியர்கள் தாய்நாட்டு குடியுரிமை துறப்பு..!

ஆண்டுக்கு 2 லட்சம் இந்தியர்கள் இந்திய பாஸ்போர்ட்களை திரும்பி ஒப்படைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுக்க பல நாடுகளில் இந்தியர்கள் பணிரீதியாக குடிபெயர்ந்துள்ளனர். அப்படி, குடி போகும் பல இந்தியர்கள் அந்த நாடுகளில் நிரந்தரமாக வசிக்கும் முடிவில் இந்திய குடியுரிமையை துறக்கின்றனர். அந்த வகையில், கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை 20 லட்சம் பேர் இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள விளக்கத்தில், தனிப்பபட்ட சூழல் மற்றும் சிறந்த  வாழ்க்கை போன்ற காரணங்களுக்காக இந்திய குடியுரிமையை இந்தியர்கள் துறக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1970ம் ஆண்டு வாக்கில், இந்தியாவில் இருந்து டாக்டர்கள், இன்ஜீனியர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். தற்போது, ஐ.டி ஊழியர்கள், தொழிலதிபர்கள் வெளிநாட்டு வாழ்க்கைக்காக இந்திய குடியுரிமையை துறக்கின்றனர். 2014ம் ஆண்டு முதல் 23 ஆயிரம் மில்லியனர்ஸ் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா நாட்டு குடியுரிமை இந்தியர்களுக்கு கிடைத்தால், எந்த தயக்கமும் இல்லாமல் இந்திய குடியுரிமையை துறந்து விடுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *