பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாக தேர்தல்.!

Advertisements

பீகார் மாநில தேர்தல் நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக  நடக்க உள்ளது. வாக்களிப்பு முடிவுகள் நவம்பர் 14ம் தேதி எண்ணப்படும் என்றும் மத்திய தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறியாக இருந்து வந்த நிலையில் பீகார் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை NDA அறிவித்துள்ளது:

பாஜக 101 இடங்களிலும்,   ஜேடியு 101 இடங்களிலும்,  எல் ஜேபி ராம் விலாஸ் 29 இடங்களிலும்,  ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6 இடங்களில் போட்டியிடவுள்ளது. அதேபோல் எச்ஏஎம்க்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பீகார் தேர்தலுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் 2025 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது தொகுதி பங்கீட்டை அறிவித்துள்ளது. இதன் மூலம் பீகார் அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள் மற்றும் கூட்டணி முறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தற்போதைய  தொகுதிகள் பங்கீட்டின் படி, ஜனதா டால் அல்லது JDU 101 தொகுதிகள், பாரதிய ஜனதா கட்சி 101 தொகுதிகள், ராம் விலாஸ் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகள், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6 தொகுதிகள் மற்றும் ஹிந்துஸ்தானி அவம் கட்சி அல்லது எச்ஏஎம் 6 தொகுதிகள் என ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த பங்கீடு கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, முக்கியமான மாற்றங்களை கொண்டுள்ளது.  2020 சட்டமன்ற தேர்தலில் ஜேடியு 115 தொகுதிகளில் போட்டியிடும் இருந்தது, ஆனால் தற்போது 101 தொகுதிகளாக  குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜக 110 இடங்களில் போட்டியிட்டு இருந்தது, இப்போதைக்கு 101 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் நிலைமை உருவாகியுள்ளது

இதன் முக்கிய காரணம், சிராஜ் பஸ்வான் தலைமையிலான எல்ஜேபி கட்சியின் பீகார் அரசியலில் புதிய நுழைவே  தொகுதிகள் குறைந்ததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு அறிவிப்பை ஜேடியூ தேசிய செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, என்டிஏ கூட்டணி கட்சிகள் எல்லாம் மகிழ்ச்சியுடன் இதை ஏற்றுக்கொள்வதாகவும்  நிதிஷ் குமாரை மீண்டும் பீகார் முதல்வராக  பதவியில் அமர்த்த நாங்கள்  அணைவரும் ஒருங்கிணைந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், என்டிஏ கூட்டணி அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்த நிலையில் தேர்தலுக்குத் தயாராக இருப்பதை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். 2025 பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக  நடைபெற உள்ளது.  முதல் நிலை தேர்தல் நவம்பர் 6ம் தேதி, இரண்டாம் நிலை தேர்தல் நவம்பர் 11ம் தேதி நடைபெறும் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு முடிவுகள் நவம்பர் 14ம் தேதி எண்ணப்படும் என்றும் மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  முக்கியமாக, என்டிஏ கூட்டணியின் தொகுதி பங்கீடு அறிவிப்பு பீகார் அரசியலில் புதிய பரபரப்பையும், வாக்களிப்பின் மேல் கவனம் செலுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.

இதற்குப் பதிலாக எதிர்கட்சிகள், குறிப்பாக   ஆர்ஜேடி –  காங்கிரஸ், மேலும் சில மற்ற கட்சிகள் கூட்டணி, தங்களது தொகுதி பங்கீட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

என்டிஏ கூட்டணியின் தொகுதி பங்கீடு அறிவிப்பு, பீகார் மாநிலத்தில் 2025 தேர்தலை தீவிரமான அரசியல் போட்டியாக மாற்றும் நிலையில், மக்களுக்கும் மற்றும் தேர்தல் அமைப்புகளுக்கும் முன்னோடி சிந்தனைகளை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.

என்டிஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அறிவித்துள்ள நிலையில்  ஆர்ஜேடி –  காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும் என்ற  எதிர்பார்ப்பு பீகார் அரசியல் களத்தில்  ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *