Parliament Election 2024: அம்பலமாகியது மேலிடத்து பர பர ரகசியங்கள்!

Advertisements

தமிழகத்தில் பாஜக பகீர் திட்டம் : அம்பலமாகியது மேலிடத்து பர பர ரகசியங்கள்

நடைபெறவிருக்கும் 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிரடி திட்டங்களுடன் தமிழகத்தில் களம் இறங்குகிறது பாரதிய ஜனதா கட்சி.

வரும் 15ஆம் தேதிக்குப் பிறகு தமிழக தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆடப்போகும் அதிரடி ஆட்டம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களைப் பாரதிய ஜனதா கட்சி கைப்பறறினாலும் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் அவர்களால் ஆழமாகக் காலூன்ற முடியவில்லை. இது டெல்லி மேல் இடத்திற்கு மிகுந்தவேதனையை அளித்து இருக்கிறது.

எனவே நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பட்டையைக் கிளப்பும் படியாகப் பல திட்டங்களைத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள் மேலிடத்து பாஜகவினர்.

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இந்தியா முழுவதும் ஏழு மாதங்களுக்கு மிகப் பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரங்களை நிகழ்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர்கள் 30 பேர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தடாலடி பிரச்சாரங்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் அதிமுகவுடன் கூட்டணி என்பது ரகசிய முடிவாக இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து பாரதிய ஜனதா கட்சி போட்டியிட வேண்டும். குறிப்பாக ஒன்பது தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் நீலகிரி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை ,வேலூர், கோவை, ஈரோடு, தென் சென்னை ஆகிய 9 தொகுதிகளில் பாஜக நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஒன்பது தொகுதிகள் தவிர புதுச்சேரியிலும் பாஜக விற்கு தனியிடம் ஒதுக்க வேண்டும் என்ற முடிவிலும் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தேர்தல் பணி செய்வதற்காகத் தமிழக பாஜக பொதுச்செயலாளர் ஏ பி முருகானந்தம் தலைமையில்  ஒரு படை அமைக்கப்பட்டு இருக்கிறது.

தென் மாநிலங்கள் முழுவதற்கும் பொறுப்பாளராகப் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவடே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி குறிவைத்திருக்கும் ஒன்பது தொகுதிகளிலும் 30 மத்திய அமைச்சர்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள்.

 இதற்கிடையே பாஜக நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய பணியின் தரப்படஇருக்கிறது. அதன்படி மத்திய அரசு திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளின் முகவரிகளைச் சேகரித்து, அவர்களை நேரடியாகசந்தித்து வாக்குகள் கேட்க வேண்டும் என்றும் முடிவாகி இருக்கிறது.

பூத் கமிட்டியில் இருப்பவர்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

வருகிற 15-ம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜகவின் தேர்தல் களம் சூடு பிடிக்கும் என்பது ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்புச் செய்தி ஆகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *