ParisOlympic: துப்பாக்கி சுடுதல் – இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

Advertisements

இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 590 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பாரீஸ்:33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல்(50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று) போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 590 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஐஸ்வரி சிங் தோமர் 589 புள்ளிகள் பெற்ற நிலையில், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *