Advertisements

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயபாஸ்கர், சத்யா, மாவட்ட ஆட்சியர் முத்துக் குமரன் உள்ளிட்ட துறைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேசிய போது, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதவை, எனவே, கடுமையான தண்டனைகள் விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெண்களை போதைப் பொருளாக பார்க்காமல், ஆண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கல்வியில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், மின்வெட்டு தற்காலிக பிரச்சினை இல்லை, அடிப்படை கட்டமைப்புகளிலேயே பிரச்சினைகள் இருந்து வருகிறது. அதனால், சூரிய ஒளி மின்சாரப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Advertisements



