“இந்தியா கூட்டணியிலிருந்து திமுக விலகவில்லை” – ப.சிதம்பரம் விளக்கம்!

Advertisements
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக சொல்லவில்லை என்று மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே மீனாட்சிபுரத்தில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் இரண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக சொல்லவில்லை என்றும் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்காததும் அதிலிருந்து விலகுவதும் முற்றிலும் வெவ்வேறானவை என்றும் தெரிவித்தார்.
மேலும்  திமுக, இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக எந்த தகவலும் தனக்கு வரவில்லை என்று கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *