Moorthy:கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது!

Advertisements

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை:கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் 2020-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த நடைமுறையைப் பின்பற்ற முடிவெடுக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் பழைய நடைமுறைபடி உள்ளூர் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் இல்லை. சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ. தூர சுற்றுவட்டார பகுதி மக்கள், ஆதார் அட்டை கொண்டு வந்தால் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது. 2020ம் ஆண்டைப் போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடியில் செல்லலாம். உள்ளூர் மக்களுக்குச் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக் கூடாது.

மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்யுமாறு தேசிய நெடுஞ்சாலை துறைக்குக் கோரிக்கை வைத்துள்ளோம். உள்ளூர் முகவரியுள்ள மக்களுக்குக் கட்டண விலக்கு தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *