
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தல் களத்தில் பணியாற்ற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வியூக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யத் த.வெ.க. தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி த.வெ.க. மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று அதிகம் பேசப்பட்டது.
எனினும், தற்போதைய தகவல்கள் இதற்கு மாறான சூழலை உணர்த்துகிறது.
வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் உடன் தேர்தல் பணிகள் சார்ந்து மட்டும் பணியாற்ற ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
