Advertisements

இமாச்சலபிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளளது.
இமாச்சலபிரதேசத்தின் கங்ரா மற்றும் குல்லு மாவட்டங்களில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்ததில், கனமழையால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்த வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனால் கனமழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisements


