4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!

Sexual Assault
Advertisements

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவியிடம், பள்ளியின் அறங்காவலரும் தாளாளருமான சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, மாணவி பள்ளி முடித்த பிறகு வீட்டிற்கு சென்றபோது, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்தகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து தகவல் பெற்ற மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், வசந்தகுமாரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கவைக்கப்பட்டது.

இந்நிலையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *