NEET: பின்னணியில் ஒரு சதி!

Advertisements

NEET | Parent | Conspiracy

நீட் பின்னணியில் ஒரு சதி இருக்கிறதாமெனக் குற்றம்சாட்டிய பெற்றோர்…

சென்னை: பணமிருந்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்று ஆளுநர் மாளிகையில் கேள்வி எழுப்பிய பெற்றோர் தெரிவித்துள்ளார்.

ஆளுநரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பிய மாணவரின் பெற்றோர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நீட் இல்லாமலேயே தமிழ்நாடு மாணவர்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளதால் நீட் தேவையில்லை. அனைத்து பெற்றோராலும் நீட் தேர்வுப் பயிற்சிக்குச் செலவு செய்ய முடியாது. நீட் தேர்வு இல்லாமலேயே சாதிக்கலாம் என்பதை தமிழ்நாடு மாணவர்கள் பலமுறை நிரூபித்துள்ளனர். 15 மணி நேரம் நீட் தேர்வுக்குப் படித்ததாக மாணவர் கூறுகிறார்; இளம் வயதில் இவ்வளவு சிரமப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளாகச் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பு உள்ளது; இவையெல்லாம் நீட் தேர்வு இல்லாமலேயே உருவானதுதான். நீட் தேர்வுக்குப் பின்னணியில் ஒரு சதி இருக்கிறது எனக் குற்றம்சாட்டினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *