
Accident | Chengalpattu | Tipper lorry
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையைக் கடக்க முயன்ற 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதி வேகமாக வந்த லாரி மோதியதில் 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்…
சென்னை: சென்னை அருகே பொத்தேரி பகுதியில் மிகப்பெரிய லாரி ஒன்று இருசக்கர வாகனம் மோதி மிகப்பெரிய கோரவிபத்தானது தற்போது ஏற்பட்டுள்ளது. பொத்தேரி பகுதியில் ரயில்வே கேட் பகுதியில் அருகே இருக்கக்கூடிய திருச்சியிலிருந்து சென்னை செல்லக்கூடிய ஜி.எஸ்.டி. சாலை கடந்து 4 இருசக்கர வாகனத்தில் வந்த மக்கள் அதிவேகமாகச் சாலையைக் கடக்க முயன்றபோது டிப்பர் லாரி மோதி விபத்து நிகழ்ந்திருக்கிறது.
இரண்டு தேசிய நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய சிக்னல் மீது மோதி மிகப்பெரிய விபத்துக்குள்ளானது 4 இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 6 பேர் சம்பவ இடத்திலேயே தற்போது உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகுறித்து தகவல் அறிந்து வந்த மறைமலை நகர் போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர்.
விபத்து காரணமாகச் சென்னையிலிருந்து திருச்சி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட 30 நிமிடத்துக்கு மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் விபத்து நடந்த பகுதியில் காயமடைந்த இரண்டு பேர் மட்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் பொத்தேரியில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே விபத்தில் சம்பவ இடத்தில 6 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

