
பழனியில் மொட்டை போடுவது வழக்கம், ஆனால் பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி என்று திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பழனி கோவிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடியில் அமைச்சர் ரமேசின் விளக்கம் ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார். பழனிக்கு அருகே உள்ள சார்பதிவாளரை அழைக்காமல் 67 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சார்பதிவாளரை வரவழைத்து முறைகேடு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, தனிநபர்கள் இருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்திருப்பதன் பின்னணியில் சதி உள்ளதாகக் கூறினார். பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார். மேலும், பழனியில் மொட்டை போடுவது வழக்கம், ஆனால் பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி என்று விமர்சித்துள்ளார்.



