DPI complex: போராட்டம் வாபஸ்!

Advertisements

போராட்டம் வாபஸ்!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தைக் கைவிடுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வாபஸ் பெறப்பட்டுள்ளது. DPI complex

சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். செப்.28 முதல் டிபிஐ வளாகத்தில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வந்தது. தமிழ்நாடு அரசு எங்களின் கோரிக்கையை 3 மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளது. 3 மாதங்களில் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *