
பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததால் ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்தியதாக நேதன்யாகுவின் குற்றச்சாட்டை ஆஸ்திரேலியா அதிபர் ஆண்டனி அல்பனீஸ் நிராகரித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரையில் 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது.
இதனால், யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு காரணியாக இருந்தது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் நிராகரித்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பாலஸ்தீனத்தை அங்கீகாரத்திற்கும் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த உயிரிழப்புக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக நம்புகிறீர்களா என செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த அவர், இல்லை என்றும் தான் அதை சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஆண்டனி அல்பனீஸ், இது தேசிய ஒற்றுமைக்கான தருணம் என்றும் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும் என்று கூறினார். மேலும், இந்த கடினமான நேரத்தில் ஆஸ்திரேலியர்கள் யூத சமூகத்துடன் நிற்பதாகவும் தெளிவுபடுத்தினார்.



