இந்தியாவில் ஊடுருவும் 5 ஆயிரம் பெண் தற்கொ*ல தீவிரவாதிகள்.!

இந்தியா பாகிஸ்தான் இடையே யுத்தம் நடைபெறும் வகையில் பகல் காம் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ராணுவ தளபதி என்றும் தற்பொழுது , இந்தியாவுக்குள் ஊடுருவும் வகையில் சுமார் 5000 பெண் தற்கொலை தீவிரவாதிகள் தயாராகி இருப்பதாகவும் பதட்டமான தகவல்கள் வெளியாகி உள்ளன,

கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பைசான் பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர் இ த
தெய்பா என்ற தீவிரவாத அமைப்பினர்,  திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தினர், இதில் சுற்றுலா பயணிகளாக வந்த 28 பேர் படுகொலை செய்யப்பட்டனர்,

இந்த சம்பவத்தை தொடர்ந்து , இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது , இரண்டு நாடுகளும் ஒரு வார அளவில் தீவிர தாக்குதலை நடத்தினர் , பின்னர் , இந்த தாக்குதல் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில்,  அந்த சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியது பாகிஸ்தான் ராணுவத்தளபதி என்ற பரபரப்பான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன இம்ரான் கான் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது நெருங்கிய உதவியாளர் சல்மான் அகமது என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் கூறும் போது , பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் மிகவும் ஆபத்தானவர் கிட்டத்தட்ட அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் மீதான போர் குற்றங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுக்கு கடிதம் எழுதி சுட்டி காட்டி இருக்கிறோம், இந்தியாவில் லஸ்கர் இ தொய்பா அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான் ராணுவ தளபதி தான் இந்தியாவுடன் மோதலை உருவாக்க அவர் முயற்சி செய்தார்.

இதற்காகத்தான் பகல்காம் தாக்குதலை அரங்கேற்றினார் இதன் மூலம் அவர் புகழ் பெறவும் இந்தியாவுக்கு எதிரான போரை தொடங்கவும் திட்டமிட்டார் எனவே இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் அதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்ட தகவல் தற்பொழுது.  மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

இதற்கிடையே இந்தியாவிற்குள் ஊடுருவூம் வகையில் புதிதாக ஐந்தாயிரம் பெண் தீவிரவாதிகளுக்கு தற்கொலை பயிற்சி தரப்பட்டு இருப்பதும் பதட்டமான தகவலாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பில் பெண்கள் பிரிவில் ஐந்தாயிரம் பேருக்கு தற்கொலை படை தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவன் மசூத் அன்சார் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்புதான் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பகல் காம் துப்பாக்கி சூட்டையும் நடத்திய இயக்கமாகும். இந்தியாவில் உள்ள காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் உடன் இணைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம் . இதனால் தான் நமது நாட்டின் மீது தொடர்ந்து இந்த அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கடந்த 2001 ஆம் ஆண்டு பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியது 2006 ஆம் ஆண்டு பதன்கோட்டு தாக்குதலை நடத்தியது . 2019 ஆம் ஆண்டில் புல்வாமா தற்கொலை தாக்குதலை நடத்தியது.  சமீபத்தில் பகல்காம் தாக்குதல் நடத்தியது என பல முக்கிய தாக்குதல்களை இந்த அமைப்புதான் நிகழ்த்தியுள்ளது.

கடைசியாக நடைபெற்ற பகல் காம் தாக்குவலை தொடர்ந்து நமது வீரர்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர்.  அதில் ஜெய்ஸ் இ முகமது தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஜெய்ஸ் இமுகமது அமைப்பின் தலைவரான மசூத் அசார் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அதில் தமது அமைப்பில் புதிதாக ஜமாத்துல் மோமினாத் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டிருப்பதாகவும் இதில் பெண்கள் பிரிவில் 5 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் இரண்டு மாதங்களுக்குள் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் இணைந்துள்ளனர். ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இந்த பெண்கள் அமைப்புக்கு மசூத் அசாரின் சகோதரி சபீதா தலைமை வகிப்பது தற்போது வெளியே தெரியவந்துள்ளது . கடந்த மாதம் இந்தியாவையே அதிர வைத்த டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பென் டாக்டர் சாகின் இந்திய பிரிவுக்கு தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்தியாவில் எளிதாக ஊடுருவும் வண்ணம் பெண்களுக்கு இத்தகைய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து,  இந்திய எல்லைப் பகுதியில் தற்பொழுது பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடப்பட்டது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *