வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை அல்லது நாளைக் காலைக்குள் மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கி இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும் தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்குகிறது.
இந்த நிலையில், பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவுறுமுன்னதாக, கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதால் பயணிகள் அதனைப் பயன்படுத்த வேண்டாமெனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.த்தி உள்ளது. மேலும் வாகனங்கள் பழுதானால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது எனவும் தெரிவித்துள்ளது.