
அடையாள அட்டை முதல் முகவரி ஆதாரம் வரை பரவலாக தற்போது அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை பயன்பட்டுவருகிறது. கடன், பாஸ்போர்ட், பேன் (PAN) என எது வாங்குவதாக இருந்தாலும் ஆதார் அட்டை எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறது. பல பள்ளிக் குழந்தைகள் கூட ஆதார் அட்டைகளை பெற்றிருக்கின்றனர். இப்படி பரவலான பயன்பாட்டால், ஆதார் அட்டை தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்த அட்டையில் ஒரு நபரின் பிறந்த நாளோ, முகவரியோ இடம்பெறாது.புதிய ஆதார் அட்டையில் புகைப்படமும், க்யூஆர் (QR) குறியீடும் மட்டும் இடம்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் 12 இலக்க ஆதார் எண் கூட இடம்பெறாது. ஆதார் கார்டு எண்கள் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை வைத்து மோசடிகளை முற்றிலும் தடுக்கும் வகையில் விரைவில், மேஜர் அப்டேட் ஒன்று ஆதார் கார்டில் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக ஆதார் ஆணைய அதிகாரி கூறியுள்ளார்.
எனினும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்களே கேட்கப்படுகிறது. இதனால், ஆதார் அடையாள அட்டை மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது வரை ஆதார் எண்களே முதன்மையானதாக கேட்கிறார்கள். ஐஆர்சிடிசியில் டிக்கெட் எடுக்க கூட ஆதார் இணைப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆதாரில் இனி புகைப்படம் மற்றும் கியூஆர் கோடு மட்டுமே இருக்கும். ஆதார் எண்கள் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் சமீபத்தில் நடைபெற்ற ஆன்லைன் கருத்தரங்கில் கூறியதாவது:-
“ஆதார் கார்டு விவரங்கள் தற்போது அரசு, தனியார் நிறுவனங்கள் சார்பிலும் கோரப்படுகிறது. இதனால், தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதார் கார்டு விவரங்கள் எளிதாக கிடைக்கின்றன. ஹோட்டல்கள், சிம் கார்டு விற்பனை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பொதுமக்களின் ஆதார் கார்டு எண்கள் உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கின்றன. இவற்றை சிலர் தவறாக பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் செயல்கள் நடக்கின்றன.
எனவே இத்தகைய மோசடிகளை களையும் வகையில் புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் அமல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்படியாக ஆதார் செயலி அறிமுகமாக இருக்கிறது. எம் ஆதாருக்கு பதிலாக இந்த புதிய செயலி இருக்கும். இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பொதுமக்கள் ஆதார் நகலை அளிக்க வேண்டியதில்லை.
டிசம்பர் முதல் புதிய விதிகளை அறிமுகப்படுத்தவிருப்பதாக யுஐடிஏஐ நிர்வாக இயக்குநர் புவனேஷ் குமார் தெரிவித்தார். இதன் நோக்கம், ஆதாரின் ஆஃப்லைன் சரிபார்ப்பைக் குறைப்பது. குறிப்பாக ஹோட்டல்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் செய்யப்படும் சரிபார்ப்பைக் குறைப்பது.ஆதார் சரிபார்ப்பு ஆன்லைனில் செய்யப்படும் போது, தனிநபரின் அடையாள ரகசியம் பாதுகாக்கப்படும்.”ஆதார் அட்டையில் என்ன தகவல்கள் இருக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அதில் புகைப்படம் மற்றும் க்யூஆர் குறியீடு மட்டுமே இருக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.
மேலும், “நாம் (மற்ற தகவல்களை) அச்சடித்துக்கொண்டே இருந்தால், மக்கள் அச்சடிக்கப்பட்ட தகவல்களுடன் உள்ள அட்டைகளையே பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். அதனால், அதை தவறாக பயன்படுத்த விரும்புபவர்கள் அதைத் தொடர்ந்து செய்வார்கள்.” என்றும் அவர் கூறினார். தற்போதைய ஆதார் சட்டத்தின்கீழ், ஆஃப்லைன் சரிபார்ப்புக்காக ஆதார் எண் அல்லது பயோமெட்ரிக் தகவல்களை சேகரிப்பது, பயன்படுத்துவது அல்லது சேமிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
புதிய ஆதார் செயலியின் அம்சங்கள் என்ன?
யுஐடிஏஐ ஒரு புதிய ஆதார் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், முக அங்கீகார (face authentication) வசதியைப் பயன்படுத்தி முகவரி சான்று புதுப்பித்தல், மொபைல் போன் இல்லாத குடும்ப உறுப்பினர்களை சேர்த்தல், மொபைல் எண்ணை புதுப்பித்தல் போன்றவற்றை செய்ய முடியும்.எதிர்காலத்தில், இந்த ஆதார் செயலியை சினிமா தியேட்டர்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு செல்வது, ஹோட்டல்களில் ‘செக்-இன்’ செய்வது, மாணவர்களை சரிபார்ப்பது, குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வது போன்றவற்றுக்கும் பயன்படுத்த முடியும்.
ஆதார் எந்த விஷயத்தின் சான்று என்பதைப் பற்றி பலருக்கும் குழப்பம் உள்ளது.உண்மையில், ஆதார் என்பது அடையாளச் சான்று மட்டும். அது குடியுரிமைச் சான்றாகவும், பிறந்த தேதிக்கான சான்றாகவும் கருதப்படாது.சமீபத்தில், ஆதாரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் குடிமகனாக சேர்க்க முடியாது என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவித்தது.
அதேபோல, ஆதார் ஒரு முகவரி சான்றும் அல்ல. அதற்குப் பதிலாக, பாஸ்போர்ட், மின்சார கட்டணப் பதிவு, வங்கி கணக்கு அறிக்கை, வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்றவை முகவரிக்கான சான்றுகளாகக் கருதப்படுகின்றன. ஆதார் கார்டில் உள்ள கியூஆர் கோடை பிரத்யேக கருவி மற்றும் யுஐடிஏஐ (ஆதார் ஆணையம்) ஆல் , அங்கீகரிக்கப்பட்ட கருவியை கொண்டு ஸ்கேன் செய்தால் தகவல்களை பெற முடியும். இதன் மூலம் ஆதார் கார்டு வழியாக நடைபெறும் மோசடிகள் முற்றிலும் தடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த மாற்றத்தை பற்றி நீங்கள் நினைப்பது என்ன என்பதன் உங்களுடைய கருத்தை பதிவிடுங்கள்…..



