
17 லட்சம் பேரை வெளியேற்ற உத்தரவு.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கிருந்து ஏராளமானோர் அகதிகளாகப் பாகிஸ்தானுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் அனுமதி இல்லாமல் தங்கியுள்ள 17 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டி வருகிறது.இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தான் அகதிகளைப் பாகிஸ்தானிலிருந்து வெளியேறப் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த அறிவிப்பிற்கு ஆப்கன் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


