Israel Hamas War: ராணுவ சீருடைகளை தைப்பதற்கு கேரள நிறுவனம் மறுப்பு!

Advertisements

ராணுவ சீருடைகளை தைப்பதற்கு கேரள நிறுவனம் மறுப்பு!

இஸ்ரேல் நாட்டு ராணுவ சீருடைகளை தைப்பதற்கு கேரள நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்: இஸ்ரேல், காசா நகரின் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றது. இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.Israel Hamas War

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கூத்துபறம்பு தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது மரியன் அப்பாரல்ஸ் எனும் ஆடை தயாரிப்பு நிறுவனம். இங்கு 1,500 மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனைத் தாமஸ் என்பவர் நடத்திவருகிறார். இந்நிறுவனம் இஸ்ரேல், கத்தார், பிலிப்பைன்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு ராணுவ சீருடையை தயாரித்து வழங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்நிறுவனம் இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடைகளை தயாரித்து வழங்க முடியாது என்று அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் சுமார் 1 லட்சம் சீருடைக்கான ஆர்டரையும் ரத்து செய்து விட்டது.Israel Hamas War

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *