K. Annamalai: திமுகாவிற்க்கு எதிராக திட்டம்!

Advertisements

திமுக அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்த திட்டம்!

கூட்டணியிலிருந்து செல்பவர்கள் செல்லட்டும்; அது அவர்களின் விருப்பம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை: சென்னையில் நடைபெற்ற பாஜக மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-அடுத்த 7 மாதங்களுக்குத் திமுக அரசுக்கு எதிராக, பாஜக போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். பெண்களை அதிகளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும். பெண்கள் சென்று வாக்கு சேகரிக்கும்போது கண்டிப்பாக வாக்காளர்கள் வாக்கை மாற்றிப் போடமாட்டார்கள். மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த மக்களை அழைத்துப் பேச வேண்டும்.

அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது; தீவிரமாக உழைக்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒன்றரை கோடி மகளிருக்கு வழங்கும் வகையில் விரிவுபடுத்த வலியுறுத்திப் போராட்டங்களை நடத்த வேண்டும்.கூட்டணியிலிருந்து செல்பவர்கள் செல்லட்டும்; அது அவர்களின் விருப்பம்; அதைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும். தேர்தல் கூட்டணிகுறித்து டெல்லி தலைமைதான் முடிவெடுக்கும். என் கருத்தை நான் ஆழமாகக் கூறிவிட்டேன். தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; வாக்கு சதவிகிதம் உயரும் பாஜகவை வலிமையடைய செய்வதே என்னுடைய நோக்கம்.

‘என் மண் என் மக்கள்’ நடைபயண நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சென்னையில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் தொண்டர்களைத் திரட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *