BJP : காவல்துதுறை திமுக-வின் ஏவல் துறை – நாயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு !

Advertisements
காவல்துறைகள்   திமுகவின் ஏவல் துறையாக மாறி உள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் நாயினார் நாகேந்திரன்  குற்றம் சாட்டியுள்ளார்.
 திண்டுக்கல் மாவட்டம்  பாஜக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில்  முருக பக்தர் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நாயினார் நாகேந்திரன்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகிக்கும் பொழுது நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாகவும், தற்போது  வேண்டாம் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு போகாத ஊருக்கு முதலமைச்சர் வழி சொல்வதாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கொலை சம்பவம் குறித்து, காவல்துறை சரியான முறையில் தனது கடமையை செய்யவில்லை என்றும்  காவல்துறை அனைத்தும்   திமுகவின் ஏவல் துறையாக மாறி உள்ளதாக விமர்சித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், மதுரை மண்டல பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட செயலாளர்கள் தமிழ்வாணன், சந்திரசேகர் உட்பட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *