Train Booking : இ-ஆதார் மூலம் எளிதில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் !

இ-ஆதார் மூலம் எளிதில் ரயில் டிக்கெட்  முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தட்கல் முறையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது தொழில்நுட்ப குறைபாடுகள் ஏற்படுவதாகப் பயணிகள் புகார் அளித்துள்ளனர்.  ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் நிறுவனம் பயணியருக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதில் பயணியர், ஒரு நாள் முன்னதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தட்கல் முறை இருந்து வரும் நிலையில் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக மக்கள் பயன சீட்டு முன்பதிவு செய்யாமல் முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தத் தொழில்நுட்ப கோளாறை நிவர்த்தி செய்யும் வகையில்,  இ-ஆதார் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாகிறது என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *