Oktoberfest: ஒரே இடத்தில் ஓன்று கூடி பீர் திருவிழா!

ஒரே இடத்தில் ஓன்று கூடி பீர் திருவிழா கொண்டாட்டம்.

ஜெர்மனி: உலகின் மிகப் பெரிய பீர் திருவிழா ஜெர்மனியின் முனிச் நகரில் களைகட்ட தொடங்கியது. உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள 34 லட்சம் பேர் இந்தப் பீர் திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர். ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் கடந்த 1810ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தப் பீர் திருவிழா அந்த நாடு பட்டத்து இளவரசர், பட்டத்து இளவரசியின் திருமணநாளை நினைவுகூரும் விழாவாகும்.

செப்டம்பர் மாதம் 2வது வாரம் தொடங்கி அக்டோபர் 3ம் தேதிவரை இந்தப் பீர் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பீர் திருவிழாவில் 60 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தற்போது 34 லட்சம் பேர் திரண்டு பீர் திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

உலக பிரசித்திபெற்ற முனிச் பீர் திருவிழாவில் அமெரிக்கா, ஆஸ்திரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்துள்ள மது பிரியர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் திளைத்து வருகின்றனர். பேண்ட் வாத்தியங்கள் முழங்கப் பாரம்பரிய உடை அணிந்த ஆண்கள், பெண்கள் மெய்மறந்து உற்சாகத்தில் மிதந்தனர். கொரோனா காலமாகக் கடந்த 3 ஆண்டுகளாகக் கலைகாட்டாத பீர் திருவிழா மீண்டும் பழைய குதூகலத்தை எட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *