China Coal Mine Accident: சுரங்க விபத்தில் 8 பேர் பலி!

சீனாவில் செயல்படும் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 8 பேர் பலியான நிலையில், மேலும் 8 தொழிலாளர்கள் மாயமானதால் தேடும் பணி நடைபெறுகிறது.

ஹெனான்: சீனாவில் செயல்படும் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 8 பேர் பலியான நிலையில், மேலும் 8 தொழிலாளர்கள் மாயமானதால் தேடும் பணி நடைபெறுகிறது. சீனாவின் ஹெனான் மாகாணத்திற்கு உட்பட்ட பிங்டிங்ஷான் நகரில் நிலக்கரிச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சுரங்கத்தில் நேற்றிரவு ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களின் நிலைமைகுறித்த அச்சம் நிலவுகிறது.

இதுகுறித்து பிங்டிங்ஷான் தியனன் நிலக்கரி சுரங்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘நிலக்கரி சுரங்கத்தில் மொத்தம் 425 பேர் பணியாற்றி வந்தனர். சுரங்கத்திற்குள் ஏற்பட்ட திடீர் விபத்தில் 8 பேர் பலியாகினர். 8 பேரைக் காணவில்லை. 380 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரை தேடி வருகிறோம்.

முதற்கட்ட விசாரணையில் நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *