
மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கஜகஸ்தானின் எலினா ரிபகினா, பெலாரசின் ஆரினா சபலென்காவை வீழ்த்தி கோப்பையை வென்றார்.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் 54 ஆவது மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுகிறது. இதில், இறுதி ஆட்டத்தில் பெலாரசின் ஆரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபகினாவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில், சிறப்பாக விளையாடிய எலினா ரிபகினா 6–3, 7–6 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதைத்தொடர்ந்து, ரிபாகினா மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக பட்டம் வென்றுள்ளார்.



