மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரை வீழ்த்தி மும்பை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
குஜராத் மாநிலம், வதோதராவில் மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 16 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப், போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.
இதில், நாட் சிவர்-பிரன்ட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதன்மூலம், பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியப் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்ததது…
