
சென்னை:
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனப்படும் நடனப் புயல் பிரபுதேவாவின் மிகப்பெரிய நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதன்முறையாக நடைபெறவுள்ளது. பிரபலமான அருண் ஈவண்ட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் V.M.R. ரமேஷ், G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 22-ம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடிகர் மற்றும் இயக்குனர் ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான நிகழ்வை இயக்குகிறார்.
ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு வகையான செட்டுகளை உருவாக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா கடந்த மாதம் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நடன நிகழ்ச்சியில் நடிகை சிருஷ்டி டாங்கே உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
