“ஒரு எம்.பி. சீட்டுக்காக திமுக கூட்டணி” – தேமுதிகவை விளாசிய வன்னி அரசு!

தேமுதிக ஒரு நாடாளுமன்ற சீட்டுக்காக திமுக கூட்டணிக்கு வந்ததாக அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்கள் நிறுத்துவது முன்பே தெரிந்திருந்தால், நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தியிருக்க மாட்டோம் என சீமான் தெரிவித்த கருத்தைப் பொறுத்தவரையில், அவர் கூறிய பல பொய்களில் இதுவும் ஒன்று எனத் தெரிவித்தார். மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு என்ன காரணம்? என்ற உண்மையை அறிய வேண்டும் என்று தெரிவித்தார். தேமுதிக கடந்த காலங்களில் பாஜகவோடு இணைந்து செயல்பட்டவர்கள் என்று கூறினார்.
ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது அந்த கூட்டணியா அல்லது இந்த கூட்டணியா என்று இரு பக்கமும் பேரம் பேசியவர்கள்தான் தேமுதிக தலைவர்கள் என்று குற்றம்சாட்டினார். கடைசியாக ஒரு நாடாளுமன்ற சீட்டுக்காக திமுக கூட்டணிக்கு வந்ததாக விமர்சித்தார். இத்தகையப் பின்னணி கொண்டவர்கள், தங்களைப் பார்த்து அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறியதாக கூறுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *