ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
தில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. இதில், அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 108 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 14 ஓவர்களில் 94 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணியை 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

