R Praggnanandhaa: மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு!

Advertisements

உலக செஸ் தொடரில் 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது…

சென்னை: அஜர்பைசானிலிருந்து சென்னை திரும்பிய பிரக்ஞ்சானந்தாவை தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரர்கள் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலகக் கோப்பஒ செஸ் தொடரொல் நார்வே வீரர் கார்ல்சனை எதிர்த்துப் போட்டியிட்ட பிரக்ஞாந்தா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். முன்னணி வீரரான கார்ல்சனுடன் மோதிய பிரக்ஞானந்தா மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளியிட்டார்.

இறுதிப்போட்டி முதல் சுற்றுகளும் டிரா ஆன நிலையின் டை பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது. இந்தப் போட்டி விறுவிறுப்பாகச் சென்றது. முன்னணி வீரருக்குக் கடும் சவால் அளித்தது பிரக்ஞ்னந்தாவின் நகர்வு. ஆனால், இந்த 2.5,- 1.5 என்ற புள்ளிக்கணிக்கில் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு வாகனத்தில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரக்ஞானந்தா சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *