அடுத்த பிரதமர் யார்? தமிழக சித்தர் கோவிலில் அமித்ஷா ரகசிய பூஜை!

Advertisements
பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக அந்தப் பதவியைப் பிடிப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பூஜை ஒன்று தற்பொழுது இந்து முன்னணி  ஆர் எஸ் எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
பாரதிய ஜனதா கட்சியின் சட்ட விதிமுறைப் படி தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் தங்களது 75 வது வயதில் கட்டாய ஓய்வு பெற்று விட வேண்டும்
இந்தச் சட்டத்தின் படி தான் அத்வானி முரளி மனோகர் ஜோஷி ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது 75 வது வயதில் ஓய்வெடுத்துக் கொண்டார்கள் அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வருகிற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி 75 வயதாகிறது இதனால் பாஜகவின் வழக்கப்படி அவர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
இது தொடர்பாகப் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது 75 வயதாகி விட்டால் ஓய்வு பெற்று விடுங்கள் அடுத்தவர்களுக்கு வழி விடுங்கள் எனக் கூறியிருந்தார்
ஆனால் நரேந்திர மோடிக்கு மட்டும் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று பாஜகவினர் கூறிவந்தனர்
இந்த நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிரதமர் மோடி ஓய்வு பெறுவாரா அல்லது பதவியில் நீடிப் பாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது
இதற்கிடையே அடுத்த பிரதமர் பதவி தன்னை தேடி வர வேண்டும் என்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு விசேஷ பூஜை நடத்தி உள்ளார் அந்தப் பூஜை தமிழ்நாட்டில் நடந்தது என்பதுதான் திடுக்கிடும் தகவலாகும்
கடந்த ஜூன் மாதம் ஏழாம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்திருந்தார் அப்பொழுது அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் இந்தச் சமயத்தில் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் எல்.
முருகன் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை
இந்தச் சமயத்தில்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு ரகசிய பூஜை நடத்தி இருக்கிறார்
உள்துறை அமைச்சர் அமித்ஷா பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மதுரை வந்ததாகச் சொல்லப்பட்டாலும் அவர் உண்மையில் இந்த ரகசிய பூஜையை மேற்கொள்வதற்காகத் தான் வந்தார் என்பது இப்போது வெளியே தெரிய வந்துள்ளது
மதுரை மீனாட்சி அம்மன்  கோவில் என்பது புதன் அதிபதி பெற்ற இடம் என்பதால் இங்கு அர்ச்சனை செய்து வணங்கினால் அரசியலில் செல்வாக்கு உயர் பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை அது மட்டுமல்லாமல் இந்தக் கோவிலின் உள்பகுதியில் எல்லாம் வல்லப்ப சித்தர் என்ற முனிவர் மறைந்த இடம் இருக்கிறது. அந்த இடத்தில் பூஜை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கையாகும்
அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்தி விநாயகர் சுப்பிரமணி வள்ளி தெய்வானை முன்பு அமித்ஷா பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது பிறகு மூலஸ்தானத்திற்கு அழைத்து வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்பு அவரது பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது இதன் பிறகு பஞ்சமுக ஆரத்தி காட்டி சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் செய்யப்பட்டன இதனைத் தொடர்ந்து மூக்குத்தி பிள்ளையார் இருக்கும் இடத்தில் பிரசாதங்கள் வழங்கப்பட்டு அங்கிருந்து அமித்ஷா டெல்லி புறப்பட்டுச் சென்றார்
மொத்தம் 25 நிமிடங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமித்ஷா எல்லாம் வல்லப்ப சித்தர் சமாதி முன்பாக ஐந்து நிமிடங்கள் சிறப்புப் பூஜை யாகங்கள் நடத்தியிருக்கிறார்
அரசியலில் உயர் பதவி அடைய வேண்டும் அதாவது அடுத்த கட்டமாகப் பிரதமர் மோடியை பின்தொடர்ந்து பிரதமராக வேண்டும் என்பதற்காக இந்தப் பூஜை நடந்ததாகச் சொல்லப்படுகிறது . தற்பொழுது அமித்ஷாவுக்கு 61 வயதாகிறது. எனவே பாரதிய ஜனதா கட்சி சட்ட திட்டங்களின் படி பிரதமர் மோடி தனது 75 வது வயதில் ஓய்வு பெற்றால் அடுத்த பிரதமர் அமித்ஷாவாக இருக்கலாம் என்று பேசப்படும் சூழ்நிலையில் அவர் நடத்திய ரகசிய பூஜை பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .தற்பொழுது டெல்லி பாஜக மேலிடத்தில் அமித்ஷா மதுரையில் உள்ள சித்தர் கோவிலில் சாமி கும்பிட்ட விவகாரம் பூதாகரமாகப் பேசப்பட்டு வருகிறது.
செய்தி தொகுப்பு : திரு.போஸ்
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *