ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல – சீமான் பேச்சு!

Advertisements

ஆடு மாடு வளர்ப்பதும் மேய்ப்பதும் அவமானம் அல்ல வெகுமானம் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கால்நடை வளர்ப்புத் தொழிலையும் அதற்கு உதவி செய்யும் வகையில் மேய்ச்சல் நிலங்களையும் காக்க வேண்டும் வலியுறுத்தி மதுரையில் ஆடு மாடுகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆடு மாடுகளைக் கொண்டு வந்து நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய சீமான், ஆடு மாடு மேய்ப்பது அவமானம் இல்லை என்றும், அதனால் வெகுமானம் கிடைப்பதாகவும் தெரிவித்தார். திருமால், பெருமாள், கண்ண்ன் ஆகியோர் ஆடு மாடு மேய்த்ததையும் குறிப்பிட்டார்.
காடுகளைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு வனத்துறையினர் ஆடுமாடுகளை மேய்ப்பதற்கு மேய்ச்சல் நிலங்களில் அனுமதிப்பதில்லை என்றும் சீமான் குற்றஞ்சாட்டினார்.
மேய்ச்சலுக்காக ஆற்றோரங்களில் இருந்த புறம்போக்கு நிலங்கள் எல்லாம் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மேய்ச்சல் நிலம் என்ற ஒரு வகைப்பாடே இப்போது இல்லாமல் ஆகிவிட்டதாகவும் சீமான் குற்றஞ்சாட்டினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *