டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளின் டிசம்பர் மாத குளிர்கால விடுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்த நிலையில், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளின் டிசம்பர் மாத குளிர்கால விடுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் வரும் 9-ந்தேதி(நாளை) முதல் 18-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.