
நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரது மகள் கயல்விழி. நடப்பாண்டில் பிளஸ் டூ தேர்வு
எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், மாணவி நீட் தேர்வு எழுதுவதற்காக தாம்பரம் செல்ல வேண்டும் என்பதால் மாணவியின் தாயார், மகளை எழுப்புவதற்காக அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது மாணவிதூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


