வடமாநிலங்களில் கடும் கிராக்கி!வருசநாடு பகுதியில் இருந்து முருங்ககாயை அனுப்பி வைக்கும் விவசாயிகள்!

Advertisements

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் விளையும் முருங்கைக் காய்களுக்கு கர்நாடாக, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முருங்கைக் காய்களை பார்சல் செய்து லாரி, லாரியாக அனுப்பி வருகின்றனர்.கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், ஆத்தங்கரைபட்டி, துரைச்சாமிபுரம், அய்யனார்புரம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, குமணன்தொழு ஆகிய ஊர்களில் 50 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடி நடந்து வருகிறது.

இங்கு வரும் வியாபாரிகள், முருங்கைக் காய்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், கர்நாடகா, கேரளா ஆகிய வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். வடமாநிலங்களில் சாம்பாருக்கு முருங்கைக் காய்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

தினசரி அட்டைப்பெட்டிகளில் முருங்கைக் காய்களை பார்சல் செய்து 15 முதல் 20 லாரிகளில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் முருங்கையின் இலையை, மூலிகைப் பொடிக்கும் அனுப்புகின்றனர். நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *