நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 939-ஆக உயர்வு!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939-ஆக அதிகரித்துள்ளது.

திபெத்–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறைச் சரிவால், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி லெண்டே ஆற்றில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் நேபாளத்தின் போடே கோஷி ஆற்றில் சீறிப்பாய்ந்ததில், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்தப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 939-ஆக உயர்ந்துள்ளது. மேலும், வெள்ளத்தில் சிக்கி 85 பாதுகாப்புப் படையினர் மற்றும் 320 வெளிநாட்டினர் உள்ளிட்ட 4,250 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கண்டக் ஆற்றில் அடையாளம் காணப்படாத 3 பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவா கிராமத்தில் 3 இந்தியர்களை நேபாள ராணுவம் மீட்டுள்ளதாக, நேபாளத்துக்கான இந்திய தூதர் நவீன் வஸ்தவா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *